முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது : அண்ணாமலை பற்றி பேசுவதற்கோ விமர்சனம் செய்வதற்கோ அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதி இல்லை.
சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் அபத்தமானது, பேசிய பிறகு அவர் என்ன பேசினார் என்று அவருக்கே தெரியாது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதனை எதிர்க்கிறோம், அதற்கு வருத்தப்படுகிறோம் என அவர் பேசினார்.