Connect with us

Raj News Tamil

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி!

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமானவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர், மதுபான முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற காவலுக்காக, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், தேர்தல் பிரச்சாரத்திற்காக, இவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்த ஜாமீனுக்கான நாட்கள் கடந்த 2-ஆம் தேதி அன்று முடிந்த நிலையில், உடல்நலப் பிரச்சனைகளை காரணமாக காண்பித்து, அவர் மற்றொரு முறை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் மீதான இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்காக, சில அறிவுறுத்தல்களை, நீதிமன்றம் வழங்கியுள்ளது.

More in இந்தியா

To Top