தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். நடப்பாண்டின் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஆணையில் கூறியிருப்பதாவது: நிகழாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதுகுறித்த தகவல் எதுவும் இடம்பெறாதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.