“J65 இருக்கு.. J67 இருக்கு.. ஆனா J66 மட்டும் இல்லையே” – IPL Match பார்க்க சென்ற ரசிகருக்கு நடந்த சம்பவம்!

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டியத்தில், சி.எஸ்.கே அணிக்கும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே, நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில், சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியை காண சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர், பெரும் சோதனை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, CSK-வின் தீவிர ரசிகரான ஜூனைத் அகமது, நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, மைதானத்திற்கு சென்றுள்ளார்.

ரூபாய் 4 ஆயிரத்து 500 மதிப்புள்ள, J66 எண் வரிசையில், டிக்கெட்டை வாங்கியுள்ளார். ஆனால், மைதானத்தின் உள்ளே சென்றபிறகு தான், J65 மற்றும் J67 மட்டுமே இருப்பதும், J66 இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜூனைத் அகமது, ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் முழுவதையும், தரையில் நின்றுக் கொண்டே பார்த்து ரசித்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பிறகு தான், J69-க்கும் J70-க்கும் இடையில், J66 இருப்பதை, கண்டறிந்தார்.

யாரே ஒருவர் இருக்கையின் எண் வரிசையை மாற்றி வைத்ததால், முதல் இன்னிங்ஸ் முழுவதும் நின்றுக் கொண்டே, ஜூனைத் மேட்ச் பார்த்துள்ளார், இதுதொடர்பான பதிவு, இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News