இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் எஸ்.சோம்நாத், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், ககன்யான் திட்டத்தின் மூலம், விண்வெளிக்கு செல்லும் முதல் மனிதராக பிரதமர் நரேந்திர மோடி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
இதனால், பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளிக்கு செல்ல உள்ளாரா? என்ற கேள்வி, பலரது மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பிரதமர் விண்வெளிக்கு செல்வதற்கு முன்பு, மனிப்பூருக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.