வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வடக்கு மண்டல தீயணைப்புத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். கடலில் சிக்கி இருப்பவர்களை மீட்பது, மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை குடம், தண்ணீர் கேன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மூலம் மீட்பது, ஸ்குபா வீரர்கள், ரப்பர் படகுகள் மூலம் கடலில் சிக்கித் தவிப்பர்களை மீட்பது உள்ளிட்டவை குறித்து சுமார் 120 தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராயபுரம் தொகுதி சட்டமன்ற மூர்த்தி,
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை ஏற்கனவே திறந்து விடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.