வட கொரியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியை கடுமையாக எதிர்த்து வருகின்றது. இந்நிலையில் வடகொரியா இன்று 10-பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
அதில் ஒரு ஏவுகணை தென் கொரியாவின் 60-கி.மீ தொலைவில் உள்ள கடற்பரப்பில் தரையிறங்கியது. இதற்கு அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் பிராந்திய அத்துமீறல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக எண்ணிக்கையில்லான ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மேற்கொண்டுவரும் பெரிய அளவிளான ராணுவ பயிற்சிகளை கைவிட வேண்டும் என வடகொரியா அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளன.