சென்னை மடிப்பாக்கம் கீழ்க் கட்டளை பேருந்து நிறுத்தம் அருகே சிலர் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பெயரில் அங்கு நின்று கொண்டிருந்த வட மாநில பெண்ணை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அந்த பெண் ஒடிசா மாநிலம் கோர்டா மாவட்டத்தை சேர்ந்த கீதா (35) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.