தமிழகத்தில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது..! பாஜகவை ஒருமையில் சாடிய கீதா ஜீவன்..!

மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பொது கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம், கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவிற்கு கொள்கை, கோட்பாடுகளே கிடையாது என்றார். மகாகவி பாரதியார், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் இன்றும் தலித் மக்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. இங்கு ஒரு ஆணியும் புடுங்க முடியாது, என்று பேசினார்.