ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு அரங்கத்தையே கலகலப்பாக்கியது. விழாவில் அவர் ‘காவாலையா’ பாடல் படப்பிடிப்பிற்கு தனக்கு 6 நாட்கள் இருப்பதாக கூறி தன்னை கடைசி நாள் தான் அழைத்தார்கள் எனவும், பாடல் காட்சியில் தனக்கு ஒரு stepபை மட்டும் தம்மனாவுடன் ஆட வைத்துவிட்டு, அடுத்தது தன்னை மட்டும் தனியாக ஆட வைத்ததாகவும்,
தமன்னாவிடம் பேச கூட விடவில்லை எனவும் கிண்டல்லாக நடன இயக்குனர் ஜானி மாஸ்டரை கூறினார்.
ஜெயிலர் படத்தைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் “லால் ஸலாம்” படப்பிடிப்பிற்கு சென்று வருகிறார்.இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.