கூட்டணி குறித்து எங்கேயும் பேசவில்லை..! பின் வாங்கிய அன்புமணி ராமதாஸ்..!

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. அண்மையில் நாமக்கல்லில் பொதுக்கூட்டத்தில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இதற்கான கூட்டணி கட்சிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுக கட்சிகளில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் உள்ளது என்றார். மேலும் 2026-ல் பாமக தலைமையில் ஆட்சி அமையும் எனத் தெரிவித்தார். அதிமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் போது, பாமக தலைவர் அன்புமணி இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக்கியது.

இதனிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கூட்டணி குறித்து எங்கேயும் பேசவில்லை என்று லாவகமாக ஜகா வாங்கியுள்ளார்.