ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல், வரும் 5-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுகவின் சார்பில், வி.சி.சந்திரகுமார் என்பவர் போட்டியிடுகிறார்.

ஆனால், ஆளுங்கட்சியின் தலையீட்டால், தேர்தல் நியாயமானதாக நடக்காது என்ற கூறி, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மா.கி.சீதாலட்சுமி போட்டியிட இருப்பதாகவும், அவரது வெற்றிக்கு நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News