“ரூபாயில் வரும் ‘ரூ’ தமிழ் எழுத்து இல்லை” – சீமான்

2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, நேற்று முன்தினம், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைக்கான லச்சினையை வெளியிடும்போது, அதில் ரூபாய்க்கான குறியீடாக உள்ள ‘₹’ பயன்படுத்தப்படாமல், அதற்கு பதிலாக ‘ரூ’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது.

இது, அரசியல் வட்டாரங்களில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு இருக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ரூபாயில் உள்ள ரூ என்பது தமிழ் எழுத்தே இல்லை” என்றும், “ர வரிசையில் ஆரம்பிக்கும் எழுத்துக்கள் தமிழில் துவங்காது. அப்படி இருக்கும்போது, அதனை தமிழ் எழுத்து என்று கூறுவதா?” என்றும் கூறினார்.

மேலும், கடைகளின் பெயர் பலகைகளில், தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று, மேயர் பிரியா கூறியிருக்கிறார். ஆனால், அவரால் தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா? என்றும், சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News