தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை, நடிகர் விஜய் நேற்று அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும், அதிகமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சீமான், செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பேசிய அவரிடம், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், கட்சி தொடங்குவது மிகவும் எளிது. அதில் நீடித்து நிலைப்பது தான் கடினமான காரியம். அதனை தம்பி விஜய் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.