கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், செவிலியருக்கான பட்டப் படிப்பை, கோழிக்கோடு மாவட்டத்தில் படித்து வந்தார். எப்போதும் துருதுருவென இருக்கும் இந்த பெண், கடந்த சில நாட்களாக, அமைதியாகவே இருந்து வந்தார்.
இதனை கவனித்த கல்லூரி பேராசிரியர்கள், அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கியுள்ளார். அப்போது, அந்த தனக்கு நடந்த கொடூரத்தை விளக்கியிருந்தார். அதாவது, அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் இரண்டு, பார்ட்டி இருப்பதாக கூறி, தங்களுடைய வீட்டிற்கு அழைத்துள்ளனர்.
இதனை நம்பி அங்கு சென்ற அந்த பெண்ணை, கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். இறுதியில் சுயநினைவை இழந்ததும், அவர்கள் இருவரும் இணைந்து, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.