அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் அண்ணா திமுக என்ற தனி கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த தகவல் அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 3-ந் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பயணத்தை தொடங்குகிறார்.
அன்றைய தினம், தமது புதிய கட்சியின் பெயரையும் அறிவிக்க இருக்கிறாராம். கட்சிப் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு கட்சி நிர்வாகிகளை பின்னர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
அம்மா மக்கள் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணைப் பொதுச்செயலாளராக வைத்திலிங்கமும் இருப்பார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செப்டம்பர் 3-க்குப் பின்னர் படிப்படியாக வெளியாகும் என ஓ.பி.எஸ் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.