“முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அரசு” – ஓ.பி.எஸ் அறிக்கை!

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து விமர்சனம் செய்து, ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்” என்றும், “திமுக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்றும் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறியது, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை என்று திமுக நிறைவேற்றாத 90 வாக்குறுதிகளை குறிப்பிட்ட ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், திமுக அளித்த மொத்த வாக்குறுதிகளில், 20 சதவீதத்தை தான் நிறைவேற்றியுள்ளது என்று விமர்சித்த அவர், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

Recent News