பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகம் இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 வது நடைமேடையில் விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட டிவியில் வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது.
சுமார் மூன்று நிமிடங்கள் ஒளிபரப்பான பான் வீடியோவைக் கண்ட பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.சில பயணிகள் அதனை பார்க்க முடியாமல் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதைப்பற்றி உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாட்னா ரயில் நிலையத்தில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சி என்ற நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை உடனே நிறுத்துமாறு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் ஆபாச வீடியோ பகிரங்கமாக ஒளிபரப்பான சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.