“ஓசி-ல நான் வரல.. இந்தா காசு வாங்கிக்கோ” – அமைச்சர் பொன்முடிக்கு பதிலடி தந்த மூதாட்டி!

சென்னை அம்பத்தூர் பகுதியில், திமுக கட்சி சார்பில், சுயமான சுடர் விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துக் கொண்டு, உரையாற்றினார். அதில், பெண்களுக்கான கட்டணமில்லா இலவச பேருந்து திட்டம் குறித்து பேசிய அவர், ஓசி பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை கூறியிருந்தனர். இந்நிலையில், மூதாட்டி ஒருவர் அமைச்சர் பொன்முடிக்கு பதிலடி தரும் வகையிலான வீடியோ ஒன்று வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அதில், அரசு பேருந்து ஒன்றில் ஏறிய மூதாட்டி ஒருவர், பயணச்சீட்டுக்கு பணத்தை வழங்கியுள்ளார்.

அதனை வாங்க மறுத்த நடத்துநர், அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறியுள்ளார். ஆனால், மீண்டும் நடத்துநரிடம் பணத்தை கொடுத்து டிக்கெட் வேண்டும் என்று கேட்ட அந்த மூதாட்டி, “ஓசி பேருந்தில் பயணம் செய்கிறோம் என்று சொல்விட்டார்கள்.

எனவே, பணத்தை வாங்கிக் கொள். இல்லை என்றால், பயணம் செய்ய மாட்டான்” என்று நடத்துநரிடம் மள்ளுக்கட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, தமிழ் மக்கள் எவ்வளவு வைராக்கியம் வாய்ந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.