ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்த சுமார் 60 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பேருந்தில் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஏற்கனவே காயமடைந்த பலர் மேலும் படுகாயமடைந்தனர்.

ஏற்கனவே பெரும் விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பித்தவர்கள், மீண்டும் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.