ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் இரவெல்லாம் காத்திருந்து ரத்த தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்திருக்கிறார்.