மாணவனை நீட் தேர்வு எழுத அனுமதிக்காத அதிகாரிகள்: இந்த காரணத்துக்காகவா?

2024 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை நீட் நுழைவு தேர்வை இன்று நடத்துகிறது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் ஒட்டுமொத்தமாக 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளும் தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் ஒன்றரை லட்சம் பேரும் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

இந்நிலையில், திருவாரூர் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. மதியம் 1:30 மணியுடன் தேர்வு எழுதுவதற்கான அனுமதி நிறைவடைந்த நிலையில் இறுதி நேரத்தில் திருவாரூர் பிடாரி கோயில் தெருவை சேர்ந்த ஹரிகரன் என்ற மாணவன் தேர்வு எழுதுவதற்காக வந்தபோது அதிகாரிகள் கால நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி அவரை வெளியேற்றினார்கள்.

இதனால் அவர்களுடைய பெற்றோரும் மாணவரும் மிகுந்த சோகத்தில் தேர்வு மையத்தின் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

RELATED ARTICLES

Recent News