Connect with us

Raj News Tamil

திருமணத்திற்கு Ok.. ஆனால் அதுக்கு No..- ரகுலின் முடிவு!

சினிமா

திருமணத்திற்கு Ok.. ஆனால் அதுக்கு No..- ரகுலின் முடிவு!

சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 4 வருடங்களாக ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்நானி என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் 21ம் தேதி அன்று கோவாவில் நடைபெற உள்ளது.

பிரமாண்டமாக நடைபெறும் இவர்களது திருமணத்தில் சில கொண்டாட்டடங்களுக்கு தடைவிதித்துள்ளாராம் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதாவது, சுற்று சூழலை மாசுபடுத்தாத வகையில், பசுமை வழியில் கொண்டாட முடிவு செய்து பட்டாசு, ஒலிப்பெருக்கி உள்ளிட்டவைகளுக்கு No சொல்லியிருக்கிறாராம்.

அதனை செயல்படுத்தவதற்காக ஒரு குழுவையே ஏற்பாடு செய்துள்ளாராம் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரது இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

More in சினிமா

To Top