பைக், ஆட்டோ, கார் ஆகியவற்றை, ஆன்லைனில் புக்கிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் செயலி தான் ஓலா . இந்த செயலி, கூகுள் நிறுவனத்தின் மேப்-ஐ தான், தங்களது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தது.
இதற்காக, வருடத்திற்கு 100 கோடி ரூபாய் வரை செலவழித்து வந்தது. ஆனால், தற்போது அந்நிறுவனம் கூகுள் மேப்-ஐ நீக்கிவிட்டு, தங்களது சொந்த தயாரிப்பில் புதிய மேப்-ஐ உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து OLA குழுமத்தின் தலைவரும், துணை நிறுவனருமான பவிஷ் அகர்வால், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ கடந்த மாதம் Azure platform வெளியேறிய பிறகு, தற்போது நாங்கள் கூகுள் மேப்-ல் இருந்து வெளியேறிவிட்டோம். ஒரு வருடத்திற்கு, நாங்கள் 100 கோடி ரூபாய் செலவழித்து வந்தோம்.
ஆனால், எங்களது சொந்த மேப்ஸ்-க்கு முழுவதுமாக மாறி, தற்போது நாங்கள் சாதித்துவிட்டோம். உங்களுடைய Ola App-ஐ பரிசோதித்து பாருங்கள், தேவையென்றால் அப்டேட் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், Street View, 3D Maps, Drone Maps ஆகிய வசதிகளை , விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, இந்நிறுவனம், தங்களது ஓலா மேப்ஸ்-ஐ, ஓலா ஸ்கூட்டர்களில், மென்பொருள் அப்டேட்டாக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.