பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓலா, உபேர்: 20 கி.மீ. -க்கு ரூ.1200 மேல் வசூல்!

சென்னையில் 20 கி.மீ. -க்கு ரூ.1200 மேல் அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓலா, உபேர் போன்ற செயலிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஓட்டுநர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

நேற்று முன்தினம் சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரை, திருச்சி, கோவையிலும் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. 2வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர் என்று ஓலா, உபேர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஓலா, உபெர் செயலிகளில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரமாணவே குறைந்த அளவிலான ஓட்டுநர்களே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு முன்பாக சென்னையில் 20 கி.மீ. தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 கி.மீ. தூரத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1400 வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Recent News