ரூ.800 கோடி மதிப்புள்ள பூனையை வளர்க்கும் பிரபல பாடகி!

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவர் டெய்லர் ஸ்விப்ட். சுயதீன பாடல்களின் மூலம் பெரும் புகழ்பெற்ற இவர், பல்வேறு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்ட இவர், ஒலிவியா பென்சன், மெரிடீத் க்ரே, பெஞ்சமின் பட்டன் ஆகிய 3 பூனைகளை வளர்த்து வருகிறார்.

இந்த 3 பூனைகளில், ஒலிவியா பென்சன் என்ற பூனையின் மதிப்பு, ரூபாய் 800 கோடி என்று தகவல் கசிந்துள்ளது. All About Cat என்ற அமைப்பு சேகரித்துள்ள தகவலின்படி, இந்த விஷயம் வெளிச்சித்திற்கு வந்துள்ளது.

அதாவது, டெய்லர் ஸ்விப்ட் உடன் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், விளம்பரப் படங்களிலும், அந்த பூனை நடித்துள்ளதால், அதன் மதிப்பு 800 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளதாம். இதுமட்டுமின்றி, உலகிலேயே பணக்கார செல்லப் பிராணிகளில், இந்த பூனை 3-வது இடத்தை பிடித்துள்ளதாம்.

2-வது இடத்தை பிடித்துள்ள செல்லப் பிராணி, 825 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும், முதலிடத்தை பிடித்துள்ள செல்லப் பிராணி, 41 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் All About Cat அமைப்பு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News