சீனாவில் அதிகரித்து வரும் BF 7 புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
பிஎஃப் 7 அதிகரித்து வரும் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை BF 7 புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.