காந்தி ஜெயந்தி தினமன்று கூட கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்ற அவலம் மதுரவாயலில் நிகழ்ந்துள்ளது.
காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக உட்பட இந்தியா முழுவதிலும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்றுள்ளது.
கூகுள் பே வசதியுடன் டார்ச் லைட் அடித்து நடைபெற்ற இந்த சட்டவிரோத மது விற்பனையில், பீர் பாட்டில்கள், மது பாட்டில்கள், உயரக மதுபானங்கள் என விற்பனை அமோகமாக நடைபெற்றது.
சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவது தெரிந்தும் காவல்துறையினர் கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.