குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஹரி நாடாரிடம் 100 கோடி ரூபாய் கடன் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்காக 1.25 கோடி ரூபாய் பெற்றுக் கொண்ட ஹரி நாடார், கடன் வாங்கித் தராமல் மோசடி செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து ஹரிநாடர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரிநாடரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஹரி நாடாரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.