சேலம் மாவட்டம் வாழப்பாடி காளியம்மன் கோவில் பகுதியில், உப்பு குடோன் மற்றும் தொழிற்சாலையின் கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இன்று காலை திடிரென தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், கட்டுமான பணியில் ஈடுபட்ட ஆறு தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இவர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து மீட்டனர்.
இதில் கடலூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலு(25) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.