Connect with us

Raj News Tamil

தி கோட் கதை இதுவா? கேட்கவே செம மாஸா இருக்கே?

சினிமா

தி கோட் கதை இதுவா? கேட்கவே செம மாஸா இருக்கே?

வித்தியாசமான கதைகளை பரிசோதனை செய்து பார்ப்பதை வழக்கமாக கொண்டவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் இதற்கு முன்னர், சென்னை 28, மாஸ், மாநாடு என்று பல்வேறு பரிசோதனை முயற்சி திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், தற்போது தி கோட் என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய சில விநியோகஸ்தர்கள், கதை சுருக்கத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ரஷ்யாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு யார் காரணம் என்பதை, விஜய் கண்டுபிடிப்பது தான் கதை என்று கூறப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top