பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளிவிவரங்களுடன் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை ‘மன்னிப்பு, இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. எந்த நடவடிக்கை என்றாலும் சட்டப்படி சந்திக்க தயார்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக எம்.பி. டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.