ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து இன்று (ஆக.23) அதிகாலை விமானத்தில் வந்து திருவேங்கடம் என்பவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்.