தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின், கனவு திட்டங்களில் ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாஜக அரசு நினைத்து வரும் நிலையில், எதிர்கட்சியினர் இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த திட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு, தங்களது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், குளிர்கால கூட்டத் தொடரில், இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.