மிக்ஜம் புயலின் போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி உள்ள இந்து பெற்லாங் சாலையில் 50 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது.
அந்த பகுதியில் 8 பேர் சிக்கியதாகவும் அதில் ஆறு பேர் உடனடியாக மீட்கப்பட்டிருந்ததாகவும் இருவரின் உடல் பள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது அதிகாலை நான்கு மணி அளவில் இருவரில் ஒருவர் உடல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து மணி அளவில் பொக்லின் எந்திரம் மூலம் உடல் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட நபரின் பெயர் நரேஷ் என்றும் அந்த நபர் அருகாமையில் இருந்த எரிவாயு நிரப்பும் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தவர் என்பதும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மீட்பு பணியானது தீவிர நிலையில் நடைபெற்று வருகிறது.