எருதுகட்டு விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

கீழக்கரை அருகே நடைபெற்ற எருதுகட்டு விழாவில் காளை மாடு குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் காளைளை அடக்க முயன்ற 12 பேர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் கிராமத்தில் உள்ள ஊர் காவலன் அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டு விழா நேற்று (அக்.5) மாலை நடைபெற்றது.

வேளானூர் கண்மாய் திடலில் நடைபெற்ற இந்த எருது கட்டு விழாவில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிலிருந்து 25-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கொண்டுவரப்பட்டு காளைகளின் கழுத்தில் நீண்ட வடத்தால் இணைக்கப்பட்டு களத்தில் தனித்தனியாக இறக்கிவிடப்பட்டது.

இதனை உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சேர்ந்து ஆர்வமுடன் அடக்கினர். அப்போது களத்தில் 25 வதாக இறக்கிவிடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடிய காளையின் கொம்பு மதியழகன் என்பவரின் குத்தி தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த மதியழகனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த மதியழகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

இந்த எருது கட்டு விழாவில் காளைகளை அடக்க முயன்று 12 பேர் காயமடைந்து இதில் மூன்று பேர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News