ஜம்மு காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்: பண்டிட்டுகளின் பீதிக்குப் பின்னால் இருப்பது என்ன..?

காஷ்மீரில், பண்டிட்டுகளின் தொடர் படுகொலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம், மேலும் தீவிரமடைந்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக பண்டிட் சமூகத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகாரித்து வருகிறது.

இந்த நிலையில், சோபியான் மாவட்டத்தில், கடந்த 15-ம் தேதி பூரண் கிருஷ்ணன் என்பவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் அந்த சமூகத்தினரும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களின் பெயர் பலகைகளை, போராட்டக்காரர்கள் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.