தக்காளியை தொடர்ந்து வெங்காய விலை உயரும் அபாயம்…..இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி..!!

நாடு முழுவதும் தக்காளியின் விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வரும் செம்டம்பர் மாதம் முதல் வெங்காய விலையும் உயரும் என கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்டு இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தக்காளி விலை தற்போது தான் ரூ.200 ல் இருந்து மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News