Connect with us

Raj News Tamil

ஆன்லைன் வழி டெலிவரி தொழிலாளா்களுக்கு ! சூப்பா் ஆஃபர் அறிவித்த தமிழக அரசு..!

தமிழகம்

ஆன்லைன் வழி டெலிவரி தொழிலாளா்களுக்கு ! சூப்பா் ஆஃபர் அறிவித்த தமிழக அரசு..!

ஆன்லைன் வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவா்களுக்கென தனி நலவாாியம் அமைத்துள்து
தமிழக அரசு .

அதன்படி, அதில் அறிவித்துள்ளதாவது,தமிழ்நாட்டில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, “தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் நலவாரியம் ” எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை , ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட கிக் தொழிலாளா்கள் உறுப்பினராக சோ்க்கப்பட்டு பல்வேறு உதவிகள் செய்ய வழிவகை செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top