செல்போனுக்கு வந்த மோசடி மெசஜே்.. நக்கலாக கையாண்ட இளைஞர்.. சிரிப்பலையில் மூழ்கிய சமூக வலைதளம்..

ஆன்லைனில் மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு அளித்தும், ஒரு சிலர் அந்த கும்பல்களிடம் சிக்கி, பணத்தை இழக்கின்றனர். ஒரு சிலர், அந்த மோசடி கும்பல்களின் அழைப்பை, தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால், ஒரு சில குசும்புக்கார நெட்டிசன்கள், அந்த மோசடி கும்பலை, வேற லெவலில் கலாய்த்து விடுவார்கள். அப்படியான சம்பவம் ஒன்று தான், தற்போது நடந்துள்ளது. அதாவது, “PAN எண் அப்டேட் செய்யப்படாததால், உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த லிங்கை க்ளிக் செய்து, PAN எண்ணை அப்டேட் செய்யுங்கள்” என்று நெட்டிசன் ஒருவருக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனை பார்த்த அந்த நெட்டிசன், ஓகே பைய்யா என்று ரிப்ளை செய்துள்ளார். இதையடுத்து, “இப்போது அந்த லிங்க் உள்ளே சென்று, பேன் நம்பரை இணையுங்கள்” என்று மீண்டும் மோசடி கும்பல் கூறியுள்ளது.

இதற்கு மீண்டும் பதில் அளித்த அந்த நெட்டிசன், “இது மோசடி இணையதளம் என்பது எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் உள்ளது. நான் ஒரு மென்பொருள் பொறியாளர்.. அச்சு அசல் உண்மையான வங்கி இணையதளம் போலவே, நான் உங்களுக்கு போலியாக ஒன்று செய்து தருகிறேன்” என்று நக்கலாக கூறியுள்ளார்.

இதனை புரிந்துக் கொள்ளாத அந்த கும்பல், “உண்மையாகவா சொல்கிறீர்கள்” என்று கூறியுள்ளது. இதற்கு மீண்டும் ரிப்ளை செய்த அவர், “வங்கி இணையதளம் போலவே உருவாக்க 20 ஆயிரம் ரூபாய் வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த கும்பல், “எங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு, உங்களுடைய டிசைனை அனுப்புங்கள்” என்று கேட்டுள்ளது. இவ்வாறு முடியும் அந்த சேட்டிங், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News