Connect with us

Raj News Tamil

10 லட்சத்தில் 7 பேருக்கு பாதிப்பு.. பக்க விளைவு குறித்து ஒரு நல்ல செய்தி… கோவிஷீல்டு பரபரப்புக்கு முற்றுப்புள்ளி..

இந்தியா

10 லட்சத்தில் 7 பேருக்கு பாதிப்பு.. பக்க விளைவு குறித்து ஒரு நல்ல செய்தி… கோவிஷீல்டு பரபரப்புக்கு முற்றுப்புள்ளி..

கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களில், ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்படுவதாக, அந்த தடுப்பூசியை தயாரித்த நிறுவனம், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த செய்தி, இந்திய மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு இருக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்சியாளரும், இந்தியாவின் டாப் 10 தொற்று நோயியல் மருத்துவருமான டாக்டர் ராமன் கங்காகேத்கர், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-

“முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது, ஆபத்து அதிகமாக இருக்கும். ஆனால், இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது, ஆபத்து குறைந்துவிடும்.

இதேபோல், 3-வது தவணையில், ஆபத்தின் அளவு இன்னும் குறைந்துவிடும். ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால், அது முதல் 3 மாதங்களிலேயே தெரிந்துவிடும்” என்று, கங்காகேத்கர் பேட்டி அளித்துள்ளார்.

“கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில், 10 லட்சம் பேரில், 7-ல் இருந்து 8 பேருக்கு தான், ரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனை ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த கோவிஷீல்டு தடுப்பூசி, பல மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில், நல்ல விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்றும், “அவர்கள் தற்போது நல்ல உடல்நலத்துடன் தான் இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், சில உதாரணங்களை முன்வைத்து, தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்து பேசிய அவர், “நீங்கள் சாலையில், வாகனத்தை இயக்கிக் கொண்டு போகும்போது கூட, விபத்துகள் ஏற்படுவதற்கான அரிதான வாய்ப்புகள் உள்ளது.

அல்லது ஒரு தனி நபர் வைட்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சில அரிதான வாய்ப்புகள் உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பல்வேறு உதாரணங்களை கூறிய அவர், “ஒரு தனிப்பட்ட நபர் வைட்டமின் B12 ஊசி எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படும்போது, முதல் தவனையை மருத்துவமனையிலேயே எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்.

ஏனென்றால், அவருக்கு சிலவிதமான அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

இவ்வாறு எந்தவொரு மருந்துக்களை எடுத்துக் கொண்டாலும், அதில் சில பக்க விளைவுகள் இருக்கும் என்று கூறிய அவர், “கோவிஷீல்டு தடுப்பூசியால் கிடைத்த நன்மைகளை நம்மால் மதிப்பீடு செய்யவே முடியாது” என்று கூறி, முடித்துக் கொண்டார்.

More in இந்தியா

To Top