தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி சினிமாவில் நடித்து வருபவர் ஊர்வசி ரௌட்டாலா. இவர், தமிழில் லெஜெண்ட் என்ற படத்தின் மூலம், பிரபலமாகியிருந்தார்.
இந்நிலையில், நடிகை ரௌட்டாலா குறித்து, புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, உலக அளவில் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன். இந்த காரின் விலை 12 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த காரை, இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகள் தான் பெரும்பாலும் வாங்கி வருகின்றனர். இவ்வாறு இருக்க, நடிகை ஊர்வசி ரௌட்டாலா, இந்த காரை தற்போது வாங்கியுள்ளார். இதன்மூலம், இந்த காரை வாங்கிய முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.