எதிர்க்கட்சிகள் போலி வாக்குறுதியை தருகிறார்கள் – பிரதமர் மோடி பேச்சு

மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில், புதிய சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு பேசிய அவர் இலவச மின்சாரம், கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற வாக்குறுதிகள் ஏமாற்று வேலை என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

மக்களை கவர்வதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட வாரிசு கட்சிகள் போலி வாக்குறுதிகளை அளிப்பதாக கூறினார். தொழில்துறை மற்றும் வணிகத்தை பாழாக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதாக பிரதமர் மோடி சாட்டினார்.

கர்நாடகா தேர்தலின் போது ஏழை குடும்பங்களுக்கு அரை லிட்டர் பால் இலவசம், 5 கிலோ அரிசி இலவசம், ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என பாஜக இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News