ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலா இணைய வேண்டும் ஜெ.உதவியாளர்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெ மரணத்திற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி,சசிகலா அணி என பல்வேறு அணிகளாக பிரிந்ததுள்ளதை கண்டு வேதனை தெரிவித்த அவர், பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஜெ பார்வையில் இருந்து உலகை பார்த்த நான், இப்போது இரண்டு கண்களும் பறிபோய் திக்குத் தெரியாமல் தடுமாறி நிற்கிறேன். நான் யாரிடம் போய் சொல்வது என்று வேதனை தெரிவித்த பூங்குன்றன், பிரிந்து சென்றவர்கள் ஜெ-வின் பிள்ளைகளாய் இணைய வேண்டும் என்றார். அதுவே ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளார்.