தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போல் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு போவது நல்லது என கூறியுள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஜெயலலிதாவைவிட என்னோட தாய் 100 மடங்கு, மனைவி 1000 மடங்கு உயர்ந்தவர் என்கிறார். இவரை யார் கேட்டது?. ஓபிஎஸ் அல்லது வேறு யாராவது பாஜகவை பேசினார்களா?. அவருக்கு மென்டலி பிராப்ளம்னு பேசிக்குறாங்க. அண்ணாமலை கீழ்ப்பாக்கத்திலோ அல்லது பெங்களூர் நிமான்சிலோ பரிசோதித்துக்கொள்வது நல்லது என கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெயக்குமார் முதலில் பாஜகவை திட்டினார். கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணி தொடரும் என்கிறார். அனைவரும் அறை மென்டல்கள்..முழு மென்டல்களாக உள்ளதாக புகழேந்தி பேசினார்.