ஜெ.சமாதியில் சபதம் எடுத்த ஓபிஎஸ் டீம்..! பீதியில் ஆட்டம் கண்ட இபிஎஸ் டீம்..!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுக-வில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி என பல்வேறு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.

பின்னர் தொடர்ந்து தங்கள் கட்சிக்குள்ளேயே மாறிமாறி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ்-ஆல் அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, மாநில அணி இணைச்செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன், தென் சென்னை வடக்கு கிழக்கு செயலாளர் எம்.வி.சதிஷ் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், ஜெ நினைவிடத்தில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மேலும் இரவு பகல் பாராது பாகுபாடின்றி உழைப்போம், எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதாவின் வழியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நாங்கள் அனைவரும் உண்மையாகவும், கடுமையாகவும், உழைப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர்.

இச்சம்பவம் இபிஎஸ் அணியினரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.