Connect with us

Raj News Tamil

ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும் நாளையும் (ஜூன் 22,23) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top