உலக அளவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான விருதுகளில் ஒன்று ஆஸ்கர். கடந்த ஜனவரி மாதம், 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து முடிந்திருந்தது.
இதற்கிடையே, 98-வது ஆஸ்கர் விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் குழுவுக்கு, புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களை, தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் முழுமையாக பார்க்க வேண்டும் என்று, புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.