இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரம் யார் என்ற கருத்துகணிப்பை ஆர்மாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது.
அந்த சர்வேயில், ஆலியாபட், நயன்தாரா, தீபிகா படுகோனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளார் நம் சமந்தா. மேலும் இது முதல் முறை இல்லையாம். 8வது முறையாக இந்த முதலிடத்தை சமந்தா தக்க வைத்துள்ளாராம்.
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது மன உறுதியாலும், கடின உழைப்பாலும் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.