25,200 பீர் பாட்டில்களுடன் கவிழ்ந்த லாரி!

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் 25,200 பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.

பெரம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 25,200 பீர் பாட்டிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். இந்த லாரியானது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பல்லக்கவுண்டனம்பாளையம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் லாரில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் உடைந்து சிதறியது.

தகவலறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த லாரி ஓட்டுநர் செல்வகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News